சனி, 25 பிப்ரவரி, 2017

தமிழ், ஆட்சிமொழியாக்கப்பட்டது பெருந்தலைவர் ஆட்சியில்

தமிழ், ஆட்சிமொழியாக்கப்பட்டது பெருந்தலைவர் ஆட்சியில்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தமிழ்நாடு ஆட்சி மொழிச்சட்டம் 1956 என்பதுதான்
தமிழ் மொழி குறித்த முதல் சட்டமாகும்.[1

"மக்கள் தம் எண்ணங்களை தடங்கலற்று வெளிப்படுத்த தாய்மொழியே தகுந்த மொழியாகும். மக்களின் நலனுக்காக ஆட்சிபுரியும் அரசு நிர்வாகம், மக்கள் மொழியில் நடைபெறுவதே முறை என்று ஆட்சிமொழிச் சட்டம் 27.12.1956-இல் நிறைவேற்றப்பட்டு 19.1.1957-இல் ஆளுநரின் இசைவு பெற்று, சனவரித் திங்கள் 23-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.[1]

ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேறிய பிறகு 1957-இல் ஆட்சிமொழிக் குழுவை அரசு ஏற்படுத்தியது.[2]

அரசு அலவலகங்களில் தமிழ் மொழி ஆட்சிமொழியாகப் பயன்படுத்தப்படுவதற்குரிய நடவடிக்கைகளைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டு வருகிறது.

இதன் முக்கியப் பணியாகத் தலைமைச் செயலகத் துறைகளிலும், துறைத் தலைமை அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மண்டல/மாவட்டநிலை அலுவலகங்களிலும் ஆய்வுகள் செய்யப்படுகின்றன."[3]

####################################################
தமிழ் மொழியின் வளர்ச்சிக்குக் காமராஜர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

ஆனால், ஒரு போதும் தான் தமிழ் மொழியை வாழ வைத்ததாக அவர் தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை.

1955-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை தமிழ் மொழியில் அச்சிடப்பட்டது.

1958-ம் ஆண்டு தமிழ் ஆய்வுக் குழுவினை நிறுவியது தமிழ் வளர்ச்சிக்குக் காமராஜர் செய்த மாபெரும் சாதனையாகும்.

அலுவல் மொழிச் சட்டத்தின் மூலம் தமிழ் ஆட்சி மொழியாக்கப் பட்டதைச் செயல்படுத்தவும், தமிழின் பயன்பாட்டை அதிகப்படுத்தவும் அக்குழு ஏற்படுத்தப்பட்டது.

14 ஜனவரி 1958-ம் ஆண்டு முதற்கொண்டு தமிழக அரசு அலுவலகங்களில் தமிழ் தட்டச்சு இயந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

அதே நாளில் தமிழ் மொழி தமிழகத்தின் ஆட்சி மொழியாகவும் அறிவிக்கப்பட்டது.

அதேசமயம், தேசிய ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்காக காமராஜரின் அரசாங்கம் மும்மொழிக் கொள்கையினை ஏற்றுக் கொண்டது.

1961-ம் ஆண்டு காமராஜர் ஆட்சியில் தான் தமிழ் மொழி கல்லூரிகளில் பயிற்று மொழியாக்கப்பட்டது.

1962-ம் ஆண்டு தமிழ் அகாடமி தனது முதல் தமிழ் கலைக்களஞ்சியத் தொகுதியை வெளியிட்டது.
######################################################

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D

http://keetru.com/index.php/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/25752-2013-12-16-15-06-05

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

முத்துரமேஷ்நாடார்

தலைவர்,தமிழ்நாடு நாடார் சங்கம்

பனை/பதநீரின் மருத்துவ குணங்கள்

பனை / பதநீரின் மருத்துவ குணங்கள்

இன்று நாம் பழமை பற்றி பேசுவது வெறுமனே வரட்டுவாதம் அல்ல . உண்மையில் நாம் மண்ணில் மாற்றம் வேண்டும் என்பதற்கு தான். முந்தய இடுகையில் அம்மைக்கு யாழ்ப்பாணத்தில் பதநீர் வழங்குவார்கள் என குறிப்பிட்டு இருந்தார் . இந்த காலத்தில்தான் பதநீர் இறக்குவார்கள் எனவே அதைப்பற்றி எழுதலாமே என எண்ணி இந்த இடுகை .

இந்த பதநீர் ஒரு சைவ பானம்அதுமட்டும் அல்ல நமது தமிழதேசிய பானம் என்றும் கூறலாம். இது கலப்படமில்லாமல் அருந்தினால் இதன் சிறப்பே தனி எனலாம் . நம் நாட்டில் பெரிய அளவில் இதை உற்பத்தி செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்தினால் இதன் செயல்பாடுகள் அளப்பரியது பல்வேறு நோய்களை நீக்கவல்லது எனலாம். இந்த பதநீரிலும் ,பனை வெல்லத்திலும் எல்லாவித ஊட்ட சத்தும் உள்ளது என கண்டு அறிந்திருக்கிறார்கள் .

தொழு நோயை நீக்கும் பதநீர்

நாளும் ஒரே பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கி காலை ,மாலை அருந்தி பனைஓலைப்பாயில் படுத்து பனைவிசிரியியை பயன்படுத்தி
பனைஓலையில் உணவு உண்டு பனைஓலை குடுசையில் 96 நாள்கள் தாங்கி இருந்தால் தொழு நோய் நீங்கும் என ஒருமருத்துவ் குறிப்பு உண்டு .

மாதவிடாய் தடை

மாதவிடாய் தடைபட்டு அதனால் கருப்பை சார்ந்த வலி . வாய்வு , காட்டி முதலியவற்றினால் பெண்கள்அவதிபடுவார்கள் அது மட்டும் அல்லாமல் இந்த காலத்தில் மார்பகம் விம்மி பருத்து ஒருவிதமான சன்னி நோய்போல உண்டாகும் இந்த நோய்களுக்கு பனையின் குருத்தை அதன் உள்பகுதியை உட்கொண்டால் மாதவிடாய் சிக்கலின்றி வெளியேறி நோயை நீக்கும் .

இரத்த கடுப்பு

வெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை,மாலை இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர இரத்த கடுப்பு .மூல சூடு தணியும். அதேபோல மஞ்சளை பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண் ,வெப்ப கழிச்சல் , சீத கழிச்சல் நீங்கும் .

பதநீர்

இந்த பதநீர் ஒரு சிறப்பான நம் தேசிய குடிநீர் எண்பது நாம் அறிந்ததே இந்த பதநீரை இறக்க தமிழ் நாட்டில் தடை உள்ளது காரணம் வேலைவாய்ப்பில்லாத தமிழர்கள் வேலை பெற்றுவிடுவார்கள் என்பதாக இருக்குமோ ? அதுமட்டும் அல்லாமல் இந்த பதநீர் இறக்குவதால் மற்ற மயக்கப் பொருட்கள் (அரசுவிற்பதுதன் ) விற்பனை குறையும்தானே ?அதனால் முதலாளித்துவம் பயனடையாது தானே ? வருகிற புதிய அரசாகிலும் இந்த பதநீர் இறக்க மக்களுக்கு வாய்பளித்து பனைபொருட்களை சந்தை படுத்த நடவடிக்கை எடுக்கலாம்.

ஒருகுவளை ( 250 மிலி ) பதநீரில் உள்ள சத்துகள்

சக்கரை 28 .8 கிராம்
காரம் 7 .கிராம்
சுண்ணாம்பு சத்து 35 .4 மி.கிராம்
இரும்பு சத்து 5 .5 மி.கிராம்
பாசுபரசு 32 .4 மி.கிராம்
தயமின் 82 .3 மி.கிராம்
ரிபோபிலவின் 44 .5 மி.கிராம்
அசுகர்பிக் அமிலம் 12 .2 மி.கிராம்
நிகோடினிக் அமிலம் 674 .1 மி.கிராம்
புரதம் 49 .7 மி.கிராம்
கலோரிகள் 113 .3 மி.கிராம்

இதில் நார் சத்து மிகுந்திருப்பதால் பெண்களின் கருக்கலத்தில் / பேரு காலத்திற்குப்பின் உண்டாகும் மலச்சிக்கலை நீக்குகிறது. எல்லோரின் இதயத்தை வலுப்படுத்துகிறது . இதில் உள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகளை வலுபடுத்துகிறது.

பாலுணர்வை கூட்டிட

இதில் இயல்பாகவே அனைத்து சத்துகளும் நிரம்பி இருப்பதால் பாலுணர்வை கூட்டுகிறது என்கிற மருத்துவகுரிப்புகளும் காண கிடைக்கிறது சித்த மருத்துவம் என்பது வரட்டுத்தனமான கோட்பாடுகளை கொண்டிருக்கவில்லை இதில் முறையான அறிவியல் ஆய்வுகள் கொட்டிகிடப்பதால் நம் மக்கள் விழித்தெழுந்து நம் சித்த மருத்துவத்தை மீட்டு பயன்படுத்திட வேண்டும்
.
அழகான பனை மரம் ...அடிக்கடி நினைவில் வரும் ...அடிக்கடி நினைவில் வரும் ...

தமிழ் மருத்துவம் காப்போம் நோய்களை வெல்வோம்

தமிழ்நாடு நாடார் சங்கம் முத்துரமேஷ்நாடார்

திங்கள், 13 பிப்ரவரி, 2017

தமிழா நீ யார் தெரியுமா?

பதவிக்கு மண்டி இட்டு ஓடும் தமிழா நீ யார் தெரியுமா?...உனக்குள் இருக்கும் ஆளும் சக்தியை பெறு.

பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா?.
தனுஷ்கோடிக்கு.
ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்!.

தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன் படுத்தி தமிழன் செய்த சாதனைகள்
நிறையவே உள்ளது!.

தமிழகத்தில் 79 கோயில்களுக்கும் மேல் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன.
இதன் அர்த்தம் என்ன தெரியுமா?.

கடல் ஆமைகள் கடலில் இருக்கும்
நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ
வரை மிதந்த படி சுலபமாக பல இடங்களையும்
சென்றடைந்தன. இதை கவனித்த நம் பண்டையத் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான்.

இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல்
தீவுகளை கண்டறிந்தான்.

இதுவரை எந்த நாட்டின் கடல் படையும் போக முடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்!

மத்திய தரைக்கடல், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான்.
பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில்
பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன் பகுதியை அப்படியே கழற்றி விடும் தொழில் நுட்பம் தமிழன் மட்டும்தான் பயன் படுத்தினான்.
பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக் கொண்டனர்.

உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா,கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர்.

கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார்.

சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில்
இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில் பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகள் அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான்.
போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா?. அதுதான் உண்மை!

கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழனின்
தொழில்நுட்பம்தான் . அதாவது, கொலம்பஸ்
கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட
வழித்தடமும் ஒன்றுதான்!.

ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க
இது மட்டுமா காரணமா? இல்லை. நம் பண்பாட்டுக்கும் ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

ஆம்
தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர்.
விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம் உண்டு. தான் பிறந்த
இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும்.

தமிழகத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு.

ஓட்டுக்கு பணத்தை நிர்ணயம் செய்பவனும் அதை வாங்குபவனும் தமிழனே கிடையாது.

தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம்

தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம்

இவர் 1895ஆம் ஆண்டு, பெரிய கருப்பசாமி நாடார் வள்ளியம்மை தம்பதியினரின் புதல்வராகப் பிறந்தார்.

1914ஆம் ஆண்டு, பெண் கல்வி வளர்ச்சிக்கான சங்கத்தின் செயலாளராகப் பதவி வகித்தார். 1915ஆம் ஆண்டு திருமணம் புரிந்த இவர் 1917ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1920ஆம் ஆண்டு இராஜாஜியைச் சந்தித்தபோது அவரது சீடரானார். இவர், மாதர் கடமை என்னும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார். கதர் இயக்கத்தில் சேர்ந்து, கதர் வளர்ச்சிப் பணியை மேற்கொண்டுள்ளார்.

திருச்சியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டமைக்காக 6மாத சிறைத் தண்டனை பெற்றுள்ளார். கரூரில் இக்கட்சியின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக இவருக்கு 6 மாத கடுங்காவல் தண்டனையும் 5 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தேசசேவையின் காரணமாக 1944 ஆம் ஆண்டு மாதம் ரூ.150/- ஊதியத்திலிருந்த வேலையை விட்டு விட்டு திருச்செங்கோட்டிலிருந்த காந்தி ஆசிரமத்தில் ரூ.30/- சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். 1951-ம் ஆண்டு விருதுநகரில் உள்ள சூலக்கரையில் ஓர் ஆசிரமம் அமைத்து செயல்பட்டுள்ளார்.

இன்றைய தமிழகத்தின் பெயர் சென்னை மாகாணம் என இருந்த போது அப்பெயரை மாற்றித் தமிழகம் என பெயரிட வேண்டும் எனக் கோரி 27.07.1956 நாள் முதல் 13.10.1956 முடிய 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளார். 10.10.1956 அன்று மதுரையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

திருவாளர்கள். கு. காமராஜர், பி.கக்கன், ம.பொ.சிவஞானம், சி.என்.அண்ணாதுரை, ஜீவானந்தம் ஆகியோர் இவரை சந்தித்து உண்ணா விரதத்தை கைவிடும்படி கோரியுள்ளனர். இந்திய வரலாற்றிலேயே தாம் மேற்கொண்ட கொள்கைக்காக காந்திய வழியில் அதிக நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டவர் இவர் ஒருவரே ஆவார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களால், நமது மாநிலத்திற்கு சென்னை மாகாணம் என இருந்த பெயரை மாற்றித் தமிழ்நாடு என பெயரிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர் துறந்த தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் விருதுநகர் மாவட்டம், விருதுநகரில் ரூ.77.00 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம் 18.06.2015 அன்று திறந்து வைக்கப்பட்டது.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

திருத்தணி மீட்பு போராட்டம்

திருப்பதியை விடமாட்டோம்" ம.பொ.சி. நடத்திய எல்லைப் போராட்டம்

`தமிழ்நாடு' உருவாவதற்கு முன், தமிழகத்தின் எல்லைகளை மீட்பதற்காகச் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியம் வாய்ந்தவை.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது, தமிழ்நாடும், ஆந்திரமும் ஒன்றாக இணைந்த `சென்னை மாகாணம்' இருந்தது. தமிழ்நாட்டின் சில பகுதிகள், திருவாங்கூர் கொச்சி சமஸ்தானத்தில் அடங்கியிருந்தன.

சங்க கால இலக்கியங்களில், தமிழ் நாட்டின் வட எல்லை திருவேங்கடம் (திருப்பதி) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளையர் ஆட்சியில் கூட, 1911 ஏப்ரல் வரை, திருப்பதி மலை வட ஆற்காடு மாவட்டத்தில்தான் இருந்து வந்தது.

ஆனால், தமிழகத்திற்கும், ஆந்திரத்திற்கும் எல்லைச் சிக்கலைத் தோற்றுவிக்கும் எண்ணத்துடன், வடஆற்காடு மாவட்டத்தில் இருந்து சித்தூர், கங்குந்திக்குப்பம், திருத்தணி, புத்தூர், பல்லவனேரி, காளத்தி, சந்திரகிரி (திருப்பதி) ஆகிய தாலுகாக்களையும், தெலுங்கு பேசப்படும் கர்நூல் மாவட்டத்தில் இருந்து மதனப்பள்ளி, வாயல்பாடி ஆகிய இரண்டு தாலுகாக்களையும் பிரித்து சித்தூர் மாவட்டம் என்ற பெயரில் இரு மொழி மாவட்டத்தை உருவாக்கினார்கள்.

சித்தூர் மாவட்டம் அமைக்கப்பட்ட பிறகும், பல ஆண்டுக்காலம் வேலூர்தான் அதன் தலைநகரமாக இருந்தது. திருப்பதி வைணவத்திருத்தலமாக இருந்ததாலும், ஆந்திரர்களுக்கு அதுவே பிரதானக் கோவிலாக விளங்கியதாலும், மெல்ல மெல்ல ஆந்திரர்களின் ஆதிக்கத்திற்குச் சென்று விட்டது.

இதையெல்லாம் உணர்ந்திருந்த ம.பொ.சி., இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு மறுநாள் (16_8_1947) திருப்பதிக்குத் தொண்டர்படையுடன் சென்று, "திருப்பதி தமிழர்களுக்கே உரியது" என்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். "கிராமணியே, திரும்பிப்போ" என்று ஆந்திரர்கள் எதிர்ப் போராட்டம் நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து, "திருப்பதி யாருக்குச் சொந்தம்? தமிழர்களுக்கா, ஆந்திரர்களுக்கா?" என்ற விவாதம் எழுந்தது. "திருப்பதி தமிழ்நாட்டுக்கே சொந்தம்" என்று ம.பொ.சி. தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.

"தமிழர்களுக்கு திருப்பதி கிடைக்காது. தமிழர்களிடமிருந்து சென்னையையும் பறிப்போம்" என்றார், ஆந்திரத் தலைவர், என்.ஜி.ரங்கா. அவர் சொன்னது உண்மையாயிற்று. சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திராவைப் பிரித்து, தனி ஆந்திர மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தபோது, சென்னை நகரம் தங்களுக்கு வேண்டும் என்று ஆந்திரர்கள் கோரினர்.

இதற்கு எதிராகத் தமிழகமே பொங்கி எழுந்தது. "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று முழங்கினார், ம.பொ.சி. "சென்னை நகரம், தமிழ்நாட்டுக்கே சொந்தம்" என்று சென்னை மாநகராட்சியும் தீர்மானம் நிறைவேற்றியது.

சென்னை நகரம் தங்களுக்குக் கிடைக்காது என்பதைத் தெரிந்து கொண்ட ஆந்திரர்கள், சில காலத்திற்கு தற்காலிகமாக சென்னையைத் தங்கள் தலைநகராக வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். அந்தக் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.

இந்த நிலையில், சித்தூர் மாவட்டம் முழுவதும் ஆந்திராவுக்கு போய்விடக்கூடிய நிலைமை உருவாயிற்று. அதை எதிர்த்து 1953 மே மாதத்தில் திருத்தணியில் ம.பொ.சி. மறியல் போராட்டம் நடத்தினார். மறியல் செய்தவர்களைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.

எல்லையை மீட்கும் வரை போராட்டம் நீடிக்கும் என்று, ம.பொ.சி. அறிவித்திருந்தார். ராஜாஜி விடுத்த வேண்டு கோளின்படி, போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

திடீரென்று திருத்தணியில் வாழும் தமிழ் இளைஞர்கள், ஆந்திரர்களைக் கண்டித்து வன்முறையில் இறங்கினர். ஊராட்சி மன்ற கட்டிடத்துக்குள் புகுந்து வானொலிப் பெட்டியை உடைத்தனர்.

ரெயில் நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதனால் போலீசார் தடியடி நடத்தினர். வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று ம.பொ.சி. வேண்டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்து அமைதி திரும்பியது.

வடஎல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மத்திய அரசு முன்வராததால், ஜுலை 2_ந்தேதி திருத்தணிக்கு ம.பொ.சி. சென்றார். தடை உத்தரவை மீறி, மறுநாள் மறியல் செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் அவருக்கு 6 வார ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. சுதந்திரப்போரில் 6 முறை சிறை சென்ற ம.பொ.சி., இப்போது 7_வது முறையாக சிறை சென்றார்.

இதற்கிடையே, பிரதமர் நேருவுடன் அன்றைய முதல்_ அமைச்சர் ராஜாஜி பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில், "சித்தூர் மாவட்டத்தில் தமிழர் கோரும் தாலுகாக்கள் பற்றி விசாரிக்க, விரைவில் எல்லைக் கமிஷன் அமைக்கப்படும். இதற்காகப் போராட்டம் அவசியம் இல்லை" என்று நேரு அறிக்கை விடுத்தார்.

அதைத்தொடர்ந்து 5 நாள் சிறைவாசத்துக்குப்பின் ம.பொ.சி. விடுதலையானார். திருவாங்கூர் _ கொச்சி சமஸ்தானத்தில் இணைந்திருந்த தமிழ்ப்பகுதிகளை மீட்க, 1954 ஜுன் மாதத்தில் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான நேசமணி தலைமையில் போராட்டம் நடந்து வந்தது. இந்தப் போராட்டத்தில் நேச மணி சிறை சென்றார்.

சிறையிலிருந்த நேச மணி, ம.பொ.சிக்கு தந்தி அனுப்பினார். மூணாறு விரைந்தார், ம.பொ.சி. அவர் முன்னிலையில் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்து நடந்தது. ஆகஸ்ட் 11_ந்தேதி, தென் திருவாங்கூரில் உள்ள கல்குளம் தாலு காவில், நேசமணி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மாபெரும் ஊர்வலம் நடந்தது. அந்த ஊர்வலத்தைக் கலைக்க மலபார் ரிசர்வ் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 தமிழர்கள் உயிரிழந்தனர்.

இதனால் திருவாங்கூர் _ கொச்சி மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கலவரங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து 1955 பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் பட்டம் தாணுப்பிள்ளையை முதல்வராகக் கொண்ட பிரஜா சோசலிஸ்டுக் கட்சி மந்திரிசபை கவிழ்ந்தது.

எல்லைகளைத் திருத்தி அமைக்க மத்திய அரசு அமைத்த பசல் அலி கமிஷன் 1955 இறுதியில் தனது தீர்ப்பை மத்திய அரசிடம் வழங்கியது. திருவாங்கூர் கொச்சியில் உள்ள தமிழ் வழங்கும் தாலுகாக்களான செங்கோட்டை, கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய ஐந்து தாலுகாக்களை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று கமிஷன் தீர்ப்புக் கூறியது.

75 சதவீதம் தமிழர்கள் வாழும் தேவி குளம் _ பீர்மேடு தாலுகாக்களை தமிழகத்துடன் சேர்க்க கமிஷன் மறுத்து விட்டபோதிலும், இந்தியாவின் தென் எல்லையான குமரிமுனை தமிழகத்திற்கு கிடைத்தது.

தமிழக _ ஆந்திர எல்லைப் பிரச்சினையைச் சமரசப் பேச்சு நடத்தித் தீர்த்துக் கொள்வதாக இரு மாநில அரசுகளும் கூறிவிட்டதால், அதுபற்றிப் பசல் அலி கமிஷன் முடிவு எதையும் கூறவில்லை. தமிழக _ ஆந்திர அரசுகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படா விட்டால் மீண்டும் எல்லைக் கமிஷன் அமைக்கவேண்டும் என்று நீதிபதி பசல் அலி குறிப்பிட்டிருந்தார்.

எல்லைப் பிரச்சினையில் தமிழக _ ஆந்திர அரசுகள் இடையே உடன்பாடு ஏற்படாததால் படாஸ்கர் தலைமையில் மீண்டும் கமிஷன் அமைக்கப்பட்டது. 1_4_1960_ல் படாஸ்கர் வழங்கிய தீர்ப்பின்படி, திருத்தணி தாலுகா முழுவதும் தமிழ்நாட்டுக்குக் கிடைத்தது. புத்தூர், சித்தூர் தாலுகாக்களில் இருந்து சில கிராமங்கள் தமிழ்நாட்டுக்கு மாற்றப்பட்டன.

பெருந்தமிழர் சங்கரலிங்கநாடார்

தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்த தியாகி சங்கரலிங்கனார்

விருதுநகரில் உள்ள தேசபந்து மைதானத்தில் நம் மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவர் தியாகி சங்கரலிங்கனார்.

ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பொட்டி ஸ்ரீராமலு 1952 டிசம்பர் 15 அன்று உயிர் துறந்தார். இதையடுத்து ஆந்திர மாநிலம் உருவெடுத்தது. சங்கரலிங்கத்துக்கு இது ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியது. விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டி யாத்திரையிலும் கலந்து கொண்டார். தன்னுடைய சொத்துக்களை அருகிலுள்ள பள்ளிக்கு எழுதி வைத்து விட்டார். விருதுநகரில் ஒரு ஆசிரமத்தை அமைத்து தங்கியிருந்த போதுதான் ஸ்ரீராமலுவின் உண்ணாவிரதம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் தமிழ்நாடு பெயர் சூட்டுவதற்காகப் போராட்டம் நடத்தியதின் தூண்டுதலிலும் சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் போன்ற 12 கோரிக்கைகளை முன்வைத்து 1956 ஜூலை 27 ல் தனியாளாக சங்கரலிங்கனார் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

காங்கிரஸ் அரசு அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. ம.பொ.சி., அண்ணா, காமராஜர், ஜீவா போன்றவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட வலியுறுத்தினர். ஆனால் தன்னுடைய கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்து விட்டார். தொடர்ந்து 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்த சங்கரலிங்கனார் அக்டோபர் 10 ம் தேதி உயிர் துறந்தார்.

தொடர்ந்து அவரது கோரிக்கைக்காக பலரும் குரல் கொடுத்தனர். 1967 ஏப்ரம் 14 அன்று சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை தமிழக அரசு ஆக மாறியது. 1968 நவம்பர் 23 தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.