புதன், 19 ஏப்ரல், 2017

நாடார்கள் வரலாறு

நாடார்கள் வரலாறு
திராவிட இனத்தின் மிகப்பெரும் ஐhதியாக நாடார் சமுதாயம் விளங்கியது. ஆரியர்கள் படையெடுப்பால் திராவிடர்கள் பலவாறு பிரிய ஆரம்பித்தனர். நம் சமுதாய மக்கள் இயற்கையிலே உடல் வலிமை, கடும் உழைப்பிற்கு சொந்தக்காரர்களாக இருந்தனர். அதாவது உண்மையான சத்திரியகுலம் நாடார் குலம் தான்.
பாண்டிய, சேர, சேழ மன்னர்கள் நாடார் குலத்தவர்கள் என்று வரலாறு கூறுகின்றது. அதற்கு சரியான ஆதாரமும், வலுவான கருத்துக்களும் நம்மிடம் உள்ளது.
நாயக்க மன்னர்கள் படையெடுப்பால் நம் அரச குலம் சொல்லொன்னா துயரம் அடைந்தது. நம் சமுதாயம் சிதறி பெரும்பகுதி மக்கள் இலங்கைக்கு சென்றனர். இந்தியாவில் இருந்தவர்களும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் என பல்வேறு பகுதிகளில் மக்கள் வசிக்கமுடியாத தேரிப்பகுதிகளிலும், காட்டுப்பகுதிகளிலும் வசிக்கதொடங்கினர்.
நாடாண்டகுலம் நாடு பிடுங்கப்பட்டு காடு விரட்டப்பட்டு கடுந்துன்பம் அடைந்தது. நம் வரலாறுகள் பெரும்பகுதி அழிக்கப்பட்டன. இலங்கை மற்றும் நம் ஆட்சிக்கு அப்பார்பட்ட இடங்களில் உள்ள கல்வெட்டுகள் மூலமாகவே நாம் நம் பெருமைகளை அறிய முடிந்தது.
கிமு 6ம் நூற்றாண்டு முதல் இரண்டாயிரம் ஆண்டுகள் பாண்டிய, சேர, சேழ மன்னர்கள் தமிழகத்தை ஆண்டுவந்தனர்.
இந்த மூவருமே சகோதரர்கள் எனவும் பாண்டியன் மூத்தவன் எனவும் வரலாறு கூறுகின்றது. ஆரம்ப காலத்தில் கொற்கை தலைநகராக இருந்தது. பின் அது பாண்டிய நாட்டின் தலைநகராக மாறியது.
பாண்டியனின் துறைமுகமும் கொற்கைதான்.
1292 ல் மதுரை பாண்டியனின் தலைநகர் ஆனது. பழையகாயல் பாண்டியனின் துறைமுகம் ஆனது. கொற்கை பொலிவு இழந்தது. இந்த கொற்கை இன்று கடலில் இருந்து பலகிலோமீட்டர் தொலைவில் பனைமரக்காடாய் அமைந்துள்ளது.
14ம் நூற்றாண்டில் முகமதியர் பாண்டியமன்னனை வென்றனர். அதன் பின் மீண்டும் பாண்டியர் ஆட்சி ஏற்பட்டது. ஆனால் 16ம் நூற்றாண்டில் தெலுங்கு நாயக்க மன்னர்களிடம் பாண்டிய அரசு தோற்றது. சேர, சோழ, பாண்டிய வரலாறுகள் அழிக்கப்பட்டன. அரசகுலம் நாடுவிரட்டப்பட்டனர்.
இலங்கை, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்ட்ரா போன்ற இடங்களில் நாடார் சமுதாயம் காணப்படுகின்றது.