நாடார் எதையும் நாடார்
×××××××××××××××××××××
பெருந்தலைவர் அவர்கள் எப்போதும் தனது இனப்பெயரை தன் பெயரோடு இணைத்து எழுதியதே இல்லை.இனப்பற்று என்னும் குறுகிய வட்டத்தை விட்டு வெளியே உலா வந்த உத்தமர் அவர்.மனிதம் போற்றிய மாமனிதர் அவர்.இன்னும் சொல்லப்போனால் நாடார் என்பது அவரைப் பொறுத்தவரை எதையும் நாடாதவர் என்னும் காரணப் பெயராகவே இருந்து வருகிறது.
பொன் நாடாமல் பொருள் நாடாமல்,சொந்தம் பந்தம் சுகம் நாடாமல்,மாடு மனை வீடும் நாடாமல் நாடொன்றையே நாடிய நாடிய நாடார் அவர்.ஆகவே தான் நன் உறவினர்களின் திருமண அழைப்பிதழ்களில் கூட தன் பெயரை போடாமல் பார்த்துக்கொண்டார்.நாடே வீடென்று வாழ்ந்த வெள்ளாடைத் துறவி அவர்.
அரசு மற்றும் அரசியல் உதவிகளுக்காக உறவென்று வந்தவர்களைக்கூட உதறியவர் அவர்.சொந்தம் என்பது வீடு வரைதான் என்னும் கருத்தில் எப்போதும் மாற்றம் செய்யாத மனிதர்.
மூன்று முறை முதல்வராக இருந்தபோதும் ஒரு முறை கூட தனது ஜாதியைச் சேர்ந்த எவரையும் மந்திரி சபையில் சேர்க்க மறுத்த மகத்துவம் நிறைந்த மாமனிதர் அவர்.எனவே நாடார் என்பது எதையும் நாடார் என்னும் பெருமைக்குரிய சொல்லே என்று சொல்வதில் நாடார்கள் அனைவருக்கும் பெருமையே.
*தமிழ்நாடு நாடார் சங்கம்*
******************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக