ஞாயிறு, 5 மார்ச், 2017

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடு முற்றுகை இடும் போராட்டம்

தாமிரபரணி நெல்லை மாவட்டம் பொதிகை மலையில் தோன்றி தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் கடலில் கலக்கிறது. தமிழகத்திற்கு தண்ணீர் தர கூடிய நதிகளில் மற்ற நதிகள் போல இல்லாமல் தமிழ்நாட்டில் தோன்றி தமிழ்நாட்டிலேயே கடலில் கலக்குற நதி ஒரே நதி இதுமட்டும் தான்.

நதி நீருக்காக கேரளா,கர்நாடகா,ஆந்திரா,போன்ற அண்டை மாநிலங்களில் நாம் சண்டை போட்டு வருகிறோம்.

நெல்லை தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கு 90% பயன்படுகிறது .நச்சு தன்மை இல்லாமல் சிறப்பான ஆற்று நீரில் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது தாமிரபரணி. தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணியை அயல்நாட்டு கம்பெனிகளுக்கு"தாரைவார்த்து விட்டது தமிழ்நாடு அரசு.

99 வருசத்துக்கு 3600ரூபாய் க்கு தண்ணிரை குத்தகைக்கு விட்டிருக்கு ஒரு நாளைக்கு 15 லட்சம் லிட்டர் தண்ணிரை பெப்ஸி கம்பெனி உறிஞ்சி எடுக்க போகுது திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான் பகுதில் அமைய உள்ள பெப்ஸி கம்பெணிக்காக தான் இதெல்லாம் இதுனால எவ்வளவு பாதிப்பு ஏற்படும் தெரியுமா?

இதனால் நெல்லை,தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த பல லட்சம் விவசாயிகள் பாதிக்கபடுவார்கள்.
தமிழகத்தில் இரண்டாவது நெற்களஞ்சியமாக திகழும் நெல்லை மாவட்டத்தில் விவசாயம் அழியக்கூடிய"சூழல் ஏற்படும். பல லட்ச மக்களில் வாழ்வாதார அழிக்கக்கூடிய இச் செயல்களால் அரசுக்கு வருமாணம் எவ்வளவு தெரியுமா? 1000 லிட்டர் தண்ணீர் வெறும் 36 ரூபாய் மட்டும்தான்.

இந்தியாவுல வேற எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட அனுமதி வழங்கப்படவில்லை. நம்மிடம் பத்து லிட்டர் 0.36 பைசாவிற்கு தண்ணீரை வாங்கசி ஒரு லிட்டர் 20ரூபாய்க்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் அடிக்கிறது பன்னாட்டு கம்பெணியான பெப்ஸி. இதனால் ஒட்டு மொத்த இந்தியாவின் செல்வங்களை வெளிநாட்டிற்கு கொண்டு செல்கிறது. அதற்கு நம்நாட்டு நதியை நாமே வெளிநாட்டின் வளர்ச்சிக்காக அழிப்பது நியாயமா?

பெப்ஸி கம்பெணியின் பொதுமேலாளர் ஒரு தமிழ் பெண் என்று நாம் பெருமைபேசி திரிகிறோம்.அவங்களுக்கு நம்நாட்டை பற்றி கவலை இல்லை அமெரிக்காவில் பல கோடிரூபாய் சம்பளம் வாங்கிகொண்டு வெளிநாட்டு கம்பெணியாக்கு அடிவருடியாக செயல் படுகிறார்கள்.

குமரி,நெல்லையை அழிப்பதற்கு கூடன்குளம் அனுமின்திட்டம்,தஞ்சாவூர் டெல்டாமாவட்டங்களை அழிப்பதற்கு மீத்தேன் திட்டம்,கொங்கு பகுதிகளை அழிப்பதற்கு பல சாயபட்டறை தொழிற்சாலைகள் இப்படி ஒட்டுமொத்த மாநிலத்தையும் கார்பரேட் கம்பெணிகாரர்கள் சீரழிச்சிட்டு இருக்கிறார்கள்.

பல தேவையில்லாத விசயங்களை செய்தியாகவும்,விவாதங்களாகவும் ஒலிப்பரப்பும் ஊடகங்கள் இந்த செய்தியை பரவலாக ஒலிபரப்ப வில்லை.ஏன் என்றால் அவர்கள் விளம்பரமாக கொடுக்கும் கையூட்டை அவர்கள் இழக்க விரும்பவில்லை.

நடுநிலை பேசும் ஊடகங்கள்,இதில் ஆளும் கட்சி.எதிர்கட்சி,ஆண்ட கட்சி என அனைத்து கட்சிகளின் ஊடகங்களும் விதிவிலக்க அல்ல. அன்று வெள்ளைகாரன் கொள்ளையடிச்சான் இன்னைக்கு கார்பரேட் காரன் கொள்ளை அடிக்குறான்.

30 வருசத்துக்கு முன்னாடி குடிக்கும் தண்ணிய காசு கொடுத்து வாங்கவேண்டும் என்று யாரும் நினைச்சி பாத்திருக்க முடியுமா? நமது எதிர்காலம் இன்னும் மோசம் ஆகாம இருக்கனும்னா நாம் அனைவரும் ஒற்றுமையாக பெப்ஸி,கொக்கோ கோலா போன்ற அன்னிய நாட்டு தயாரிப்புகளை குடிக்க கூடாது.

நாம் நமது தாய் நாட்டை காக்க நமது நாட்டு தயாரிப்புகளுக்கு மட்டும் நமது ஆதரவினை கொடுக்க வேண்டும். தமிழர்களுக்கு எதிராகவும்,இந்தியர்களுக்கு எதிராகவும் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்து நமது ஜீவ நதியை நாம் காக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக பொய்யான உறுதிமொழியை நீதிமன்றத்தில் வழங்கிய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடனடியாக பெப்ஸி உள்ளிட்ட கார்ப்ரேட் கம்பெனிகளிடம் போட்டுள்ள ஒப்பந்தத்தை தமிழகஅரசு இரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பாக முதல்வர் வீடு முற்றுகை போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறோம்.

ஜெ.முத்துரமேஷ்நாடார்
தலைவர்,தமிழ்நாடு நாடார் சங்கம்
ஆசிரியர்,நாடார் மக்கள் ஜோதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக