இன்று(21/02/2018) உலக தாய்மொழி தினம்.
தமிழ் எங்கள் உயிருக்கு மேல் என பல தியாகங்களையும்,சேவைகளையும், செய்த சமுதாயம் நாடார் சமுதாயம்.
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் காமராஜர் அவரது ஆட்சியில் தமிழ் ஆட்சி மொழியாகவும்,தமிழ் கலைச்சொல் அகராதியும்,தமிழ்நாடு பாடநூல்கழகமும் தோற்றி வைக்கப்பட்டது.
கருணாகர சாகரம் எனும் இசை நூலை எழுதிய தமிழ் இசையின் தந்தை ஆபிகாம்பண்டிதர்.
தமிழ் மொழிக்காக ஆங்கிலேயே அடக்கு முறையால் உயிர் நீத்த தாளமுத்துநாடார்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் தமிழர் தளபதியாக விளங்கிய சவுந்திரபாண்டியனார்.
வறுமையின் காரணமாக மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்து தமிழ் மீது உள்ள காதலால் 153 புத்தகங்களை எழுதியவர் இலக்கியத்திற்காக பத்மஶ்ரீ விருது பெற்ற ம.பொ.சிவஞானம் கிராமணி.
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்கின்ற கொள்கையை தனது உயிர் மூச்சாக கொண்டு படிக்காத பாமரனையும் தனது தினத்தந்தி எனும் பல்கலைகழகம் மூலம் படிக்க வைத்த சி.பா.ஆதித்தனார்.
பிரசண்ட விகடன் பத்திரிக்கை ஆசிரியர்,சிறந்த தமிழ் நாவல் எழுத்தாளர் கண்ணதாசனை போல பல எழுத்தாளர்களுக்கு குருவாக திகழ்ந்து தமிழுக்கு சேவை புரிந்த நாரண.துரைகண்ணன்.
தமிழ் மொழி உயர வேண்டுமானால் தமிழன் உயர வேண்டும் என உரக்க குரல் கொடுத்த பன்மொழிபுலவர், பேராசிரியர்,பத்மபூசன் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்.
தொல்காப்பியம் தந்த தொல்காப்பியர்,பரம்பரனார்,அதங்கோட்டாசான்,ஆழ்வார்களின் தலைமை ஆழ்வாரான நம்மாழ்வார்,திருக்குறள் விளக்கவுரையை மிகச்சிறப்பாக எழுதிய பரிமேழழகர்.போன்றவர்களும் நாடார்களே.
இன்றும் தமிழ் ஜாதியினர் நடத்தும் தமிழ் அச்சு ஊடகத்திலும், காட்சி ஊடகத்திலும் முதன்மையாக இருப்பவர்கள் நாடார்களே.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு பல போராட்டங்களில் பங்காற்றி தியாகங்கள் பல புரிந்த விருதுநகர் பெரியார் வி.வி.ராமசாமிநாடார், வாலிப பெரியார் ஆசைதம்பி,
இப்படி பல தலைவர்கள் தாய் மொழியாம் தமிழுக்காக பாடுபட்டார்கள்.
திருக்குறள்,கம்ப இராமாயணம்,சிலப்பதிகாரம்,வளையாபதி,குண்டலகேசி,அகநானுறு,பறநானாறு உள்ளிட்ட அனைத்து புராண இதிகாசங்களும் நமக்கு ஓலை சுவடிகள் மூலமாகவே கிடைத்தது அந்த வரலாறுகள் கிடைக்க காரணமான பனை ஓலைகள் கிடைப்பதற்கும் காரணம் நாடாண்ட நாடார்களே!
உலக தமிழர்கள் அனைவருக்கும் உலக தாய் மொழி தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
என்றும்
சமுதாய பணியில்
ஜெ.முத்துரமேசுநாடார்
ஆசிரியர்,நாடார் மக்கள் ஜோதி
தலைவர்,தமிழ்நாடு நாடார் சங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக