வியாழன், 4 ஜனவரி, 2018

தாது மணல் தடையால் பாதிக்கப்படுவது யார்?

தாது மணல் தொழில் முடக்கம் பாதிப்பு யாருக்கு?

தமிழகத்தில் சுமார் இருபது ஆண்டுகளாக தாது மணல் தொழில் நடைபெற்று வந்தது.

தாது மணல் தொழிலில் உலக அளவில் முதலிடத்தில் இருந்தது ஆஸ்திரேலிய நிறுவனம்.

தமிழகத்தை சார்ந்த வி.வி.மினரல் நிறுவனம் மற்றும் பல நிறுவனங்கள் தாதுமணல் தொழிலை தமிழகத்தில் செய்து வந்தார்கள்.

தாது மணல் தொழிலை நேர்மையாகவும்,தூய்மையாகவும் உழைப்பவரே உயர்ந்தவர் என கொள்கை அடிப்படையில் சிறப்பாக செயல் பட்ட வி.வி.மினரல் கம்பெனி மற்றும் அதன் தொழிலாளர்களின் கடின உழைப்பால் தமிழகத்தில் மட்டும் இல்லை,இந்திய அளவில் மட்டும் இல்லை உலக அளவில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முதலிடத்தை பிடித்து வந்தது.

தாது மணல் தொழிலில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா நிறுவனமும் அதன் முதலாளிகளும் ஒரு இந்தியனிடம் அதுவும் ஒரு பச்சைதமிழனிடம் நாம் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறோமே என தொழிலில் நேரடியாக மோதி வெற்றி பெற திராணி இல்லாமல்  தமிழகத்தில் வி.வி.மினரல் கம்பெனியின் தொழில் முறை போட்டியாளர்களையும்,கம்பேனிக்கு நம்பிக்கை துரோகங்களை செய்த கயவர்களிடமும் கை கோர்த்து தமிழகத்தில் தாது மணல் தொழிலை முடக்க சதி திட்டம் தீட்டி அதை வெற்றிகரமாக செய்தும் விட்டார்கள்.

அந்நிய நாட்டு நிறுவனத்தின் பணத்திற்காக பொய் தகவல்களை தொடர்ந்து பரப்பி வரும் ஊடகங்களும் அதன் தரகர்களும் இதற்கு காரணம். உதாரணமாக
தமிழகத்தில் தாது மணல் தொழிலிக்கு எதிராக கட்டுரைகளை வெளியிட்ட தி ஹிந்து ஆங்கில நாளிதழ் மற்ற மாநிலங்களில் தாது மணல் தொழிலுக்கு ஆதரவாக கட்டுரைகளை வெளியிடுவதே இதற்கு சாட்சி.

பாரம்பரியம் மிக்க ஹிந்து பத்திரிக்கையையே தங்களது ஊடக புரோக்கர்கள் மூலம் வளைத்து விட்ட அந்நிய நாட்டு கைகூலிகளுக்கு தமிழகத்தில் உள்ள மஞ்சள் பத்திரிக்கைகளை வளைப்பது என்ன பெரிய விசயமா?

தமிழகத்தில் தாது மணல் தொழில் முடக்கியதில் தற்சமயம் வெற்றி பெற்ற அந்நிய நாட்டு நிறுவனமும்,அதன் கைகூலிகளும் மீண்டும் தாது மணல் ஆலைகளை திறந்துவிட்டால் உழைப்பால் உயர்ந்த தமிழ் முதலாளியும்,அவரது தொழிலாளர்களும் மீண்டும் உலக அளவில் முதல் இடம் பெற்று விடுவார்களே என தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள்.

எங்களை போன்ற சமுதாய உணர்வாளர்கள் எதற்காக தாது மணல் தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என மத்திய,மாநில அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம்.

தாது மணல் தொழிலை தமிழகத்தில் செய்து வருபவர்கள் 100% பச்சை தமிழர்கள்,தாது மணல் தொழிற்சாலை ஊழியர்கள் 99.99%பச்சை தமிழர்கள் தாது மணல் முடக்கத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் தாது மணல் தொழிற்சாலை அதிபர்கள் இல்லை அவர்களுக்கு தாது மணல் தொழில் இல்லை என்றால் வேறு பல தொழில்களை உருவாக்கி கொள்வார்கள் அதற்கான ஆற்றல் அவர்களுக்கு உண்டு.

ஆனால் தாது மணல் ஆலைகளை முடக்கப்பட்டதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது தாது மணல் தொழிலாளர்கள் மட்டுமே.100 தொழிலாளர்களோ,1000தொழிலாளர்களோ,10.000 தொழிலாளர்களோ இல்லை நேரடியாகவும் மறைமுகமாகவும் 1.00.000 மேற்பட்ட  தொழிலாளர்கள்

ஒரே நாளில் சுனாமி வந்தது போல்,புயல் வந்தது போல்,அந்நிய நாட்டு கைகூலிகளால்  தங்களது வாழ்வாதாரங்களை இழந்து நடுக்கடலில் துடுப்பு இல்லாத படகு போல்,இறக்கை இல்லாத பறவை போல்,தரையில் தவிக்கும் மீன்களை போல் தாது மணல் தொழிலாளர்களின் இன்றைய நிலைமையும்,அவர்களது குடும்பத்தார் நிலைமையும் உள்ளது.

இவர்கள் அனைவரும் நமது சகோதர தமிழ் ஜாதியினர் நமது சகோதர்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் மனிதநேயமிக்க நாம் அவர்களுக்கு உதவிட வேண்டுமா?வேண்டாமா?

தர்மத்தின் வாழ்வு தன்னை தற்காலிகமாக சூது வெல்லும் ஆனால் இறுதியில் தர்மமே வெல்லும்.தாது மணல் தொழிலாளர்கள் வாழ்விற்காக சட்ட போராட்டம் நடத்திவரும் வி.வி.மினரல் கம்பேனியின் முயற்சிகள் விரைவில் வெற்றி பெறும். தொழிலாளர்கள் வாழ்வில் வசந்தம் பிறக்கும்.அது வரை அவர்களின் அன்றாட தேவைகளை யார் நிறைவேற்றுவார்கள்?

அரசின் தவறான நடவடிக்கைகளால் வேலை வாய்ப்பை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு மாதம் 10:000 ரூபாய் நிவாரண தொகையை தமிழக அரசு  உடனடியாக வழங்கிட வேண்டும்.

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரப்பிரச்சனைகளை விரைவில் மத்திய,மாநில அரசுகள் நேரடியாக தலையிட்டு தீர்த்து வைத்திட வேண்டும். சட்டப்படி தாது மணல் ஆலைகளை திறந்திட துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இல்லை என்றால் எங்களது சகோதரர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட போராடுவதை தவிர வேறு வழியில்லை.தமிழகஅரசு தலைமை  செயலகம். கவர்னர் மாளிகை,மாண்புமிகு முதலமைச்சர் இல்லம்,மாண்புமிகு துணை முதல்அமைச்சர் இல்லம். போன்ற இடங்களை தொடர்ந்து முற்றுகை இட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கின்றோம்.

என்றும்
சமுதாய பணியில்
ஜெ.முத்துரமேசுநாடார்
தலைவர்,தமிழ்நாடு நாடார் சங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக