இதை யாராவது மறக்கவோ,மறுக்கவோ முடியாது.
மொழிவாரி மாகணங்கங்கள் இந்தியாவில் பிரிக்கப்பட்டு இன்றைய தமிழகம் உருவாகி 60ஆம் வைர விழா கொண்டாட்டங்கள் தொடங்குகிறது
இன்றைய தமிழகத்தில் குமரி மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்டத்தில் சில பகுதிகள் தாய் தமிழகத்தோடு இணைவதற்கு பல போராட்டங்கள் நடத்தி வெற்றி பெற்ற மார்ஷல் நேசமணிநாடார்,சாண்றோர் குல சத்திரியர்,சுத்த வீரர்,பயமறியாத பச்சை தமிழன்,தெய்வீக திருமகன் ஐயா தாணுலிங்கநாடார் போன்ற தலைவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் மாநில தலைநகரில் ஒரு சிலை கூட இதுவரை தமிழகத்தை ஆண்ட அரசுகள் வைக்கவில்லை என்பது வேதனை.
ஜாதி சங்க தலைவர்களுக்கெல்லாம் சென்னையில் சிலைகள் வைக்கப்பட்டு அரசு சார்பில் விழாக்கள் நடத்தப்படுகிறது
சரித்திர சாதனைகள் பல படைத்த நம் சமுதாயத்தில் பிறந்த வரலாற்று நாயகர்களுக்கு அரசுகள் ஏன் மரியாதை செய்யவில்லை என்று நாம் என்றாவது சிந்தித்து பார்த்ததுண்டா?
இந்நிலைக்கு யார் காரணம் என்று நாம் ஆய்வு செய்து பார்த்தால் நாம் தான் காரணம் என தெளிவாக புரியும்
நம் சமுதாய மக்கள் தொழில் தொழில் என்று வருடத்தில் 365 நாட்களும் கடைகளை விட்டு வெளிவராததே காரணம்
நம் சமுதாய மக்கள் தொழில் தொழில் என்று வருடத்தில் 365 நாட்களும் கடைகளை விட்டு வெளிவராததே காரணம்
தமிழகத்தில் தோன்றி இந்தியாவில் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய கிங்மேக்கர் காமராஜரின் பிறந்த நாள்,மறைவு நாள் ஆகிய தினங்களுக்கு கடைகளுக்கு விடுமுறை விட்டு விட்டு பெருந்தலைவரின் நினைவு இடங்களுக்கு சென்ற நாடார்கள் எத்தனை பேர்?
நாடார்களுக்கு பெருமை பேசுவதற்கு நேரம் இருக்கிறது பெருந்தலைவருக்கு கூட மரியாதை செலுத்த நேரம் இல்லை
தொழில்களை விட்டு ஒரு நாள்கூட வெளிவராத சமுதாயத்தை சார்ந்த சரித்திர நாயகர்களுக்கு அரசு எதற்கு சிலை திறக்க வேண்டும்? ஏன் விழா நடத்த வேண்டும்? இது தான் அரசுகளின் நிலை
இந் நிலை தொடரும் போது நாம் நமது தொழில்களை இழக்ககூடிய சூழல் உருவாகும் இன்று சிவகாசி பட்டாசு தொழில்,நாளை உனது அனைத்து தொழில்களும்
அரசிடம்"கோரிக்கை வைத்து போராட்டங்கள் நடத்தி வெற்றி பெற கூடிய நாடார்கள் யாரும் இப்போது இல்லையா? அல்லது நாடார்கள் யாரும்
சமுதாய பணிகளுக்கும் வருவதில்லையா?
சமுதாய பணிகளுக்கும் வருவதில்லையா?
நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்
நமது சமுதாயம் அரசியல் அங்கிகாரம் பெற்றால் மட்டுமே நமது வரலாறுகளையும்,தொழில்களையும் காக்க முடியும்.
உங்களில் ஒருவன்
முத்துரமேஷ்நாடார்
முத்துரமேஷ்நாடார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக