அறிவுச்சுடர் அறிவானந்த பாண்டியன் அண்ணாச்சி
மதுரையின் பிரபல நிறுவனமான சந்தோஷ் நாடார் கார்ப்பரேஷனுக்கு வாரிசாக பிரபலமானார் அறிவானந்த பாண்டியன் அண்ணாச்சி. 13 அக்டோபர் 1960 ல் பிற்ந்த இவரை மதுரை வாழ் நாடார் மக்கள் காவல் தெய்வமாகவே அனுஷ்டித்தார்கள் என்றால் மிகையில்லை.
மதுரை ஊர்க்காவல் படையின் (Home Guards) தலைவராக இருந்தார். இவரைப் போல் நாடார் குலத்தில் இவருக்கு முன்னரோ, இவருக்கு பின்னரோ, இவரது காலத்திலோ யாரும் இல்லை என்பது தனிச் சிறப்பு! அகில இந்திய நாடார்கள் கூட்டமைப்பின் அமைப்பாளராகவும், அகில இந்திய நாடார் இளைஞர் பேரவையின் நிறுவனத்தலைவராகவும் நாடார் இனத்தின் காவலராகவும் விளங்கினார் இவர். மதுரை கீழ மாசி வீதி மற்றும் கடை வீதிகளில் நாடார்களை தலை நிமிர்ந்து அச்சமின்றி நடக்க வைத்த மாவீரன் இவர்.
மதுரையில் மாற்று சமுதாயத்தினரால் மிரட்டப் பட்டும், கந்து வட்டிக்காரர்களால் அவதிப்பட்டும் வந்த சிறு நாடார் வியாபாரிகளுக்கும் பலசரக்கு கடைக்காரர்களுக்கும் காவல் தெய்வமாகவே இருந்தார். மதுரை சந்தைப்பேட்டை பகுதி இன்றும் இவரது முயற்சியால் நாடார் கோட்டையாகவே விளங்குகிறது. ஊர்க்காவல் படை தலைவராக இருந்ததன் காரணமாக் இவருக்கு சைரன் வைத்த காரும் போலீஸ் பாதுகாவலரும் உண்டு.
கம்பீரமான ஆதர்சமான உடல்கட்டும் உயரமும் கொண்டவர் இவர். கீழ மாசி வீதியில் லோடுமேன்களால் மிரட்டப்பட்டு அவதிப்பட்டு வந்தனர் நாடார் வியாபாரிகள். லாரிகளில் லோடு மேன்கள் லோடு இறக்கிவிட்டு பின்னர் தார்ப்பாயை சுருட்டி குடுத்து, லாரியை கூட்டி சுத்தம் பண்ணி குடுத்து வந்தனர். இதற்கு லாரி டிரைவர்கள் அவர்கள் முதலாளிகள் அனுமதியுடன் மாமூல் என்ற பெயரின் சிறு தொகையினை குடுத்து வந்தனர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் இதை லோடு மேன்கள் கட்டாயமாக்க, இந்த தொகை சரக்கு இறக்கும் வியாபாரிகள் தலையில் வந்து விழுந்தது. அதாவது லோடு இறக்கிய கூலி போக இது உபரி தொகையாக லோடு மேன்களுக்கு வழங்கப் பட வேண்டும். 2 ரூபாய், 3 ரூபாய், 5 ரூபாய் என இருந்த இந்த தொகை 1990
களில் 5000 ரூபாய், 10,000 ரூபாய் என ஆகிப்போனது.
இந்த தொகை லோடு மேன்களுக்கு எந்த உடல் உழைப்பும் இல்லாமல் கிடைத்ததோடு அவர்கள் கூலியை விட அதிக தொகையானது.
இதனால் லோடு மேன்கள் அட்டகாசம் அதிகமானது. அதிக மாமூல் குடுக்க மறுத்த வியாபாரிகள் மிரட்டப் பட்டனர். மாமூல் குடுக்க மறுத்த வியாபாரிகள் தாக்கப் பட்டனர். அதாவது நாடார்களிடமே பிழைப்பு நடத்திக்கொண்டு நாடார்களிடமே கூலியும் வாங்கிக் கொண்டு நாடார்களை மிரட்டியும் வைத்து வாழ்ந்து வந்தனர் மாற்று சமுதாய லோடு மேன்கள். இதற்கிடையில் மதுரை அவனியாபுரத்தில் பலசரக்கு கடை வியாபாரி ஒருவர் உள்ளூர் மாற்று சமுதாய ரவுடிகளால் மாமூல் குடுக்காத காரணத்தால் கொல்லப் பட்டார். இதையெல்லாம் கண்ட அறிவானந்த பாண்டியன் அண்ணாச்சி கொதித்தெழுந்தார்.
மிகவும் ஆட்டம் போட்ட மாற்று சமுதாய ரவுடிகள் தட்டிக் கேட்கப்பட்டனர். தட்டி கேட்பது என்றால் பலமாக தட்டி கேட்பது அதாவது அடிதான்! வியாபாரிகளை மிரட்டி வந்த லோடு மேன்களும் தட்டிக் கேட்கப் பட்டனர். மதுரையில் நாடார்களுக்கு ஏதாவது தொல்லை என்றால் அறிவானந்த பாண்டியன் அன்ணாச்சி இருக்கிறார் என்ற பயம் மாற்று சமுதாயத்தினர்களுக்கும், நாடார் மக்களுக்கு தெம்பும் வந்தது. குறிப்பிட்ட சமூக தலைவருக்கு குரு பூசை என்ற பெயரில் அந்த தினத்தில் கட்ட்டாய கடையடைப்பு இல்லையென்றால் கடை உடைப்பு என மதுரை அட்டகாசம் பண்ணி வந்தவர்களுக்கு எச்சிரிக்கை விடுக்கப்பட்டது.
அவரது காலத்தில் என்னை போன்ற இளைஞர்களுக்கு சமுதாய உணர்வு ஊட்டியவர் அவரென்பதில் எந்த ஐயமும் இல்லை. நாடார் மகாஜன சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக இருந்த நடிகர் ராஜ்குமார் அவர்கள் வீரப்பனால் கடத்தப்பட்ட போது அவரை மீட்க தான் தனியாக செல்லத் தயார் என அறிவித்தவர் அறிவானந்த பாண்டியன் அண்ணாச்சி அவர்கள்.
சமுதாய பணி காரணமாகவே மிகுந்த கடன் பட்ட போதும் இடைவிடாமல் சமுதாய் பனியாற்றினார். நாடார் சமுதாயப்பனி காரணமாக சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்த அண்ணாச்சி 29 நவம்பர் 2000 அதிகாலை 2.30 மணியளவில் சமயபுரத்தை அடுத்த சிறுகனூர் அருகேயுள்ள வால்பட்டரை என்ற இடத்தில் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது அன்ணாச்சிக்கு வயது 40 தான்.
அவர் தொடங்கி வைத்து விட்டுச் சென்ற பணிகளும் அவரது இடமும் இன்னும் காலியாகவே உள்ளது. இன்றும் மதுரை வாழ் நாடார் மக்களின் காவல் தெய்வமாக மனதில் நிற்பவர் எங்கள் அறிவானந்த பான்டியன் அண்ணாச்சி. இன்னும் பல காலம் அண்ணாச்சி இருந்திருந்தார் என்றால் மதுரை நாடார் கோட்டையாகியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
விருகை தோலாண்டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக