தட்சணமாற நாடார் சங்கம் தோன்றிய தியாக வரலாறு...
நாடார் சமுதாயம் வீழ்ச்சி அமைந்திருந்த நிலையில் நெல் பேட்டையில் ஒவ்வொருவரும் சமுதாயத்தை காக்க சங்க வளர்ச்சிக்கு நெல் மூட்டைகள் தானமாக வழங்கினார்கள்.
தன்னலம் கருதாது பல பேர் கொண்ட தியாகத்தால் உத்திரமாற நாடார் சங்கம்,தட்சணமாற நாடார் சங்கம் உருவானது.
நாடார் சமுதாயத்தின் முதல் வழக்குரைஞரானது எனது தாத்தா திரு.S.சிவந்தி ஆதித்தன் அவர்கள்தான்.
திரு.S.S.ஆதித்தன் என்று பெயர் கொண்ட அவர்கள் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் பணி்புரிந்தார்கள். ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு கட்டவும்,தென்கால் பாசனம் வடகால் பாசனம் ஏற்படவும் முயன்றவர்களில் ஒருவர்.
ஸ்ரீவைகுண்டம் பஞ்சாயத்தின் முதல் பஞ்சாயத்து தலைவரும் எனது தாத்தா திரு.சிவந்தி ஆதித்தன் அவர்களே...
வழக்குகளை நடத்தும் போது இரண்டு சங்கங்களின் பெயரிலும் துண்டு துண்டாக சொத்துகள் இருப்பதை அறிந்து உத்திரமாற நாடார்,தட்சணமாற நாடார் என இரு சங்கங்கள் வேண்டாம் என கருதி தட்சணமாற நாடார் சங்கத்தை மட்டும் நிலை படுத்தினார்கள்.
சொத்துகள் எல்லாம் தாத்தா சிவந்தி ஆதித்தன் அவர்கள் பெயரிலேயே இருந்தது.
எனது தாத்தா திரு.சிவந்தி ஆதித்தன் அவர்களின் மறைவுக்கு பிறகு எனது தந்தை தியாகி S.T.ஆதித்தன் அவர்கள் சுப்ரீம் கோர்ட் வழக்குரைஞர் ஆனார்கள்.
தட்சணமாற நாடார் சங்கத்தின் மொத்த சொத்துகள் தாத்தா சிவந்தி ஆதித்தன் அவர்கள் பெயரிலேயே இருந்ததால் மும்பை வரை உள்ள சொத்துகளை 72 பேட்டைகளாக பிரித்து அனைத்து சொத்துகளையும் தட்சணமாற நாடார் சங்கத்தின் பெயரிலேயே மாற்றி நிர்வாகம் செய்த்து எனது அப்பா தியாகி S.T.ஆதித்தன் அவர்கள்.
உறுதுணையாக ஆறுமுகநேரி ஐயா ராஜா பலவேசமுத்து நாடார் அவர்கள் இருந்தார்கள்.
அதன் பிறகு தனது தம்பி சி.பா.ஆதித்தனாரின் மகன் திரு.சிவந்தி ஆதித்தன் அவர்களிடம் நிர்வாகத்தை வழங்கினார்கள் என் அப்பா தியாகி S.T.ஆதித்தன் அவர்கள்.
இன்று தட்சணமாற நாடார் சங்கத்தின் சொத்து மதிப்பு ரூ50000 கோடிக்கும் மேல்...
இதை ஏன் சொல்கிறேன் என்றால் நம் முன்னோர்கள் எவ்வளவு தியாகத்தோடு இருந்தார்கள் என்பதை எண்ணி நம் முன்னோர்களின் தர்ம சிந்தனைப்படி அனைத்து சமுதாயமும் சிறந்து வாழ வேண்டும் என்பதே...
தமிழகத்தில் தர்ம சிந்தனையும்,அனைத்து சாதி சங்கத்தை நிர்வாகம் செய்யும் தர்ம மேலாண்மை மீண்டும் ஓங்க வேண்டும் என மனமாற விரும்புகிறேன்.
ஒரு சமுதாயம் எழுச்சி பெற தூய்மையான சிந்தனை அவசியம்.
தர்ம மடங்களை கட்டிக் காத்த முன்னோர்களின் சிந்தனையை எண்ணிப் பார்த்து அதன் தவத்தை உணர்வோம்...செயல் படுவோம்.
பாலசுப்புரமணிய ஆதித்தன்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக