நாங்கள் நாடாண்ட நாடார்கள் எங்களுக்கு எவ்வித இடஒதுக்கீடு சலுகைகளும் வேண்டாம்.எங்களது பாரம்பரிய பெயர் மட்டும் போதும் எங்களை சாணார் என அழைக்கவேண்டாம் என அன்றைய வெள்ளைய அரசிடம் நாடார் சங்கங்கள் மூலம் நேரடியாக கோரிக்கை வைத்து *1920* நாடார்ஷத்ரியாஸ் என்கின்ற பெயரை அரசு ஆனையில் பெற்ற முதல் சமுதாயம் நாடார் சமுதாயம்.......
சாணார்கள் என்ற பெயர் வேண்டாம் நாடார் என்ற பெயர்தான் வேண்டும் என்கின்ற கொள்கையில் நமது முன்னோர்கள் உறுதியாக செயல் பட்டு வெற்றியும் பெற்றார்கள்.அவர்களிடம் இருந்த ஒற்றுமையும் ஆளுமையும் தற்போது நம்மிடம் இல்லாதது வேதனை........ இன்றும் மாற்று ஜாதியினர் நம்மை தூற்றும் போது நம்மை முழுமையாக சாணாபயல்கள் என்று ஏசி வருகிறார்கள்,அவர்களது பார்வையில் நாம் அனைவரும் சாணார்கள்தான்......
நமது மதம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை நமது முன்னோர்கள் இயற்க்கையை வழிப்பட்டார்கள்,பிறகு லிங்கவழிபாடு,கொற்றவை வழிபாடு,முருகன் வழிபாடு,திருமால் வழிபாடு என நமது வழிபாடு முறைகள் இருந்தன. நமது நாட்டிற்கு பஞ்சம் பிழைக்க வந்த ஆரியன் நமது கடவுளை பற்றி பல கட்டு கதைகள் எழுதி நமது பண்பாடு,கலாச்சாரத்தை சிதைத்து பல புதிய வழிபாட்டு முறைகளை உருவாக்கி நமது முன்னோர்கள் நமக்காக உருவாக்கிய சித்தமருத்துவம்,களரி,ஜோதிடம்,போன்ற கலைகளை திருடி அவனது கலையாக மாற்றிவிட்டான்.நமது மதத்தின் பெயரை இந்துமதம் என்றும் மாற்றிவிட்டான். பின்பு வந்த முஸ்லீம் அரசர்கள் தங்களது அடக்குமுறையால் அதிக அளவில் மதமாற்றம் செய்தார்கள் அதில் நாடார்கள் "பட்டிணம்"என்ற பெயரில் உள்ள ஊர்களில் அதிகம் உதாரணம் குலசேகரப்பட்டிணம்,தேங்காய் பட்டிணம்.......... பின்பு வந்த கிருஸ்துவ மதத்தை சார்ந்த ஆங்கிலேயேர்கள் ஆட்சி,அதிகாரங்களை பயன்படுத்தியும்,கல்வி,வேலைவாய்ப்பு,போன்ற தேவைகளையும் பூர்த்தி செய்தும் திருவாங்கூர் சமஸ்தான அடக்குமுறைகளால் துன்பப்பட்ட 18 ஜாதிகளையும் கிருஸ்துவர்களாக மதம் மாற்றினர்.............
இந்து மதம்,கிருஸ்துவ மதம் இரண்டுமே நமது சமுதாயத்திற்கு 100% எதிரிகள் என்பதை உணர்ந்து ஐயா வைகுண்டசாமி அனைத்து ஜாதிகளுக்கும் ஆதரவாக அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தை எதிர்த்து போராடினார்.அன்புவழி எனும் ஐயா வழி மதத்தை உருவாக்கினார் நாடார்கள் முழுமையாக இந்த மதத்தில் இனைந்திருந்தால் இன்று ஐயா வழி உலகம் முழுவதும் பரவி சீக்கிய மதம் போல் தனி மதமாக அங்கிகரிக்கப்பட்டிருக்கும்..................
தமிழ்நாடு நாடார் சங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக